25 November 2022

 4,5 ஆம் வகுப்புகளில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாத நிலை - கல்வித் துறையின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்




கொரோனா தொற்று காரணமாக 2020_2021,2021-2022 ஆம் கல்வி ஆண்டுகளில் நேரடி வகுப்புகள் என்பது இல்லாமல் இருந்தது.


இதனால் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய கல்வித் துறை திட்டமிட்டது. அதன்படி திறனாய்வு மதிப்பீட்டு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.


இந்த தேர்வு மாணவர்களின் கற்றல் திறனை சரி செய்ய உதவும் என்று சொல்லப்பட்டது. அந்த வகையில் இந்த மதிப்பீட்டு தேர்வு ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடந்தது. அதில் 4,5 ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் கணிசமானவர்கள் ஒன்றாம் வகுப்பு கற்றல் நிலையிலேயே இருப்பதும் குறிப்பாக இந்த மாணவர்கள் மொழிப்பாடத்தில் எழுத்துகளை அறியாததால் எழுத்துக் கூட்டி படித்து பொருள் அறிய சிரமப்படுவதாகவும், கணக்கு பாடத்தில் எண்ணும் எண் மதிப்பும் அறியாததால் கூட்டல் ,கழித்தல் போன்ற அடிப்படை கணக்குகளை செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.


இதனை சரி செய்யும் வகையில் அந்த மாணவர்களுக்கு இணைப்பு பாடப் பயிற்சி வழங்கவும் இதன் மூலம் அவர்களின் கற்றல் அடைவு மேம்படுத்தப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக பயிற்சி கையேடு ஒன்றையும் கல்வித்துறை வடிவமைத்து இருக்கிறது.


 TNPSC அலர்ட்.. நம்பாதீங்க யாரும், அது போலி ரிசல்ட்.. புரோக்கர்களிடம் ஜாக்ரதை.. டிஎன்பிஎஸ்சி வார்னிங்




இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வு முடிவு குறித்து, சோஷியல் மீடியாவில் வரும் போலி பட்டியலை யாரும் நம்ப நம்ப வேண்டாம் என்று டி.என்.பி.எஸ்.சி., கூறியுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது.


இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு துறை சார்ந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்தியது.


அந்தவகையில், ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, ஜூலை 2ல் நடந்தது.. இந்த ரிசல்ட் வந்துவிட்டதாக கூறி, ஒரு லிஸ்ட் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிவிட்டது.. இறுதியில் அது போலி என தெரியவந்ததையடுத்து,டிஎன்பிஎஸ்சியே அதுகுறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதாக பரவும் அப்படிப்பட்ட போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இது தொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது: ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, ஜூலை 2ல் நடந்தது... தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டதாக, போலி பட்டியல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை நம்ப வேண்டாம்... இதுபோன்ற பொய் தகவல்களை பரப்புவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


டி.என்.பி.எஸ்.சி., நியமனங்கள் அனைத்தும், தேர்வு முடிவு தரவரிசைபடியே நடக்கின்றன. எனவே, பொய்யான வாக்குறுதிகளை கூறி, சட்டத்துக்கு புறம்பாக வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம், விண்ணப்பதாரர்கள் மிகவம் கவனமாக இருக்க வேண்டும்.... டி.என்.பி.எஸ்.சி.,யின் அனைத்து தேர்வு முடிவுகளும், www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதில் மட்டுமே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...