Posts

Showing posts from March 25, 2015
தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்!! 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல், வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது..வழக்கு எண் 29245/2014.
ஆசிரியர் கலந்தாய்வு தள்ளி போகுமா? வரும் 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. _தமிழக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், 1,789 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்தியது. இதில், தேர்வானவர்களுக்கு பணி வழங்குவதற்கான, இணையம் மூலமான கலந்தாய்வு (ஆன்-லைன் கவுன்சிலிங்), வரும் 28ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால், 28ம் தேதி, தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் சார்பில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வானவர்கள் கலந்தாய்வுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வர முடியுமா என, அச்சமடைந்துள்ளனர். எனவே, கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.