Posts

Showing posts from January 31, 2014
சென்னை உயர்நீதிமன்றத்தில் PG/TET I / TET II-வழக்குகள் இன்றைய( 31 .01.14 ) விசாரணை நிலை  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி 31 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி விசாரணைக்கு வந்தன TET I / TET II வழக்குகள் அனைத்தையும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்தார். PG TRB OTHER THAN TAMIL வழக்குகளுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்குகள் ஒத்திவக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில் அரசு அறிவிப்பு.  வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் கே.ரோசய்யாஉரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: தமிழகத்தின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்குவது இதற்கான முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, வேலை தேடுபவர்களையும், வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்க, மாநில வேலைவாய்ப்பு இணையதளம் என்ற தனி இணையதளம் தொடங்கப்படும்.  என்னென்ன தகவல்கள்? வேலைவாய்ப்பு ஆலோசன
உயர் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்.  மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய கே.ஸ்கந்தன், மத்திய அரசுப் பணி காலத்தை முடித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக முதன்மை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் ஹேமந்த் குமார் சின்ஹா, உயர் கல்வித்துறையின் முதன்மைச்செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ( 31 .01.14) விசாரணை * PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ( 31 .01.14) விசாரணைக்கு வருகின்றன வழக்குகள்  * சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர்  *ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி இன்று 31 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் இதர படங்களில் (except Tamil) 6 வழக்குகளும் இன்று விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த PG/TET I / TET II வழக்குகளின் நிலை இன்றுமாலையில் தான் தெரியவரும்.