ஆசிரியர் தகுதித் தேர்வெழுதியவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை: அமைச்சர்
2013 ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 82 ஆயிரம் பேர் காத்திருப்பில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பணி வழங்கும் நிலையில் அரசு இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

ஆசிரியர்கள் பணி நியமனத்தினைப் பொறுத்தவரையில், 2013 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 82 ஆயிரத்து 372 பேர் உள்ளனர். அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் தருவது என்பது அரசின் மூலமாக வாய்ப்புகள் இல்லை என்றார்.

Comments

Popular posts from this blog