முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட  ஆசிரியர்களின் கோரிக்கை 




கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள  காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின்  வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட  எங்களுக்கு வேலை கொடுப்பாரா???


தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு  நடைமுறை படுத்தியது.



அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது.


இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான்  2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது.


10 ஆண்டுகள் அதிமுக அரசு நடைமுறை படுத்தாமல் இருந்ததற்கு காரணம் என்ன என்பது தெளிவாக பார்ப்போம்.


2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள  காலி பணியிடம் நிரப்பும் நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கபட்டது.


2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு  அதிமுக ஆட்சிக்கு வந்தது. அதிமுக தேர்தல் அறிக்கையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்று அரசாணை வெளியிட்டது.(G.o.175/07-11-2011)


கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்து இருந்த ஆசிரியர்களுக்கு வேலை கிடைத்து விடும் என்று எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள் இந்த சந்தோசம் ஒரு வாரம் கூட நீடிக்க வில்லை.


15-11-2011 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று அதிமுக அரசு அரசாணை வெளியிட்டு கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்து இருந்த ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி அடைய வைத்தது.


NCTE அறிக்கையில் 23-08-2010 முன்பு  சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேவை என்று அறிக்கை வெளியிட்டது.


இந்த அறிக்கை வைத்து அதிமுக அரசிடம் நிலுவையில் உள்ள  காலி பணியிடம் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.


கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த என்ற ஒரே காரணத்திற்காக உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று அதிகாரிகள் கூறி விட்டார்கள்.


நிலுவையில் காலி பணியிடம், NCTE norms பின்பற்றி வேலை கொடுக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் வேலை கொடுக்க முடியாது என்று உறுதியாக கூறி விட்டார்கள்.


எங்கள் பக்கம் NCTE norms, pending post சாதகமாக இருந்தும் அரசு எங்களை பழி வாங்கி விட்டார்கள்.


அதிமுக அரசு எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு கொண்டு வந்தோம்.


அமர்வு நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் மற்றும் எலிப் தர்ம ராவ் அடங்கிய அமர்வு NCTE clause v விதிப்படி டெட் பொருந்தாது பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.


இந்த வரலாற்று மிக்க தீர்ப்பை வரவேற்ற கலைஞர் அவர்கள் பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் பழி வாங்கும் நோக்கில் செயல்பட கூடாது என்று அறிக்கை வெளியிட்டார்.


கலைஞர் சொன்னால் வேலை கொடுத்து விட வேண்டுமா என்ன என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது.


உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. NCTE clause v விதிப்படி டெட் தேவை இல்லை என்று உறுதி படுத்தி 5 கேள்விகள் எழுப்பி சென்னை உயர்நீதி மன்றம் விசாரித்து 5 கேள்விகள் சாதகமாக இருந்தால் பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் seniority வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.



மீண்டும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியது போது வழக்கு ஆசிரியர்களுக்கு சாதகமாக இருப்பதை அறிந்த அரசு நீதிபதி வேணுகோபால் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியவர் அதனால் அவரை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள். நீதிபதி வேணுகோபால் மாற்றி சிவஞானம் அவர்கள் விசாரித்தார்.


நீதிபதி அவர்கள் அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வழக்கு தள்ளுபடி செய்தார். NCTE clause V, pending post, உச்ச நீதிமன்றம் விசாரிக்க சொன்ன 5 கேள்விகள் எதையும் விசாரிக்காமல் வேண்டும் என்றே அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தார்.


94 பேருக்கு வேலை கொடுத்து ஊதியம் கொடுத்தால் 11000 ஆசிரியர்களுக்கு கொடுக்க நேரிடும் என்பதால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் வழக்கு தள்ளுபடி செய்து விட்டார்கள்.



நீதிபதி தவறான தீர்ப்பு கொடுத்து உள்ளார் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்யலாம் என்று இருந்த நிலையில் நிதி பற்றாகுறை காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து இருந்தோம். வழக்கு கொண்டு வர நிதி சுமை காரணமாக கொண்டு வர முடிய வில்லை நிதி திரட்டி வழக்கு கொண்டு வரும் நேரத்தில் கொரோனா வால் தடைபட்டு உள்ளது. கொரோனா நிலை சீரானதும் வழக்கு கொண்டு வரலாம் என்று இருந்த போது திமுக அரசு ஆட்சிக்கு வந்தது.



விடியல் அரசு எங்களுக்கு விடியல் தர போகிறது கலைஞர் அறிக்கை கொடுத்து உள்ளார் இதற்காக வேலை கொடுப்பார்கள் என்று நம்பி இருந்தோம் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.



அரசை எதிர்த்து வழக்கு கொண்டு வர கூடாது அமைதியான முறையில் கோரிக்கை மனு கொடுத்து அரசின் பதில் என்ன என்று தெரிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று இருந்தோம். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பு வராமல் இருப்பது தான் மனது கஷ்டமாக உள்ளது.


அதிமுக அரசு NCTE norms 2014 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டு நடைமுறை படுத்தாமல் இருந்து உள்ளார்கள் காரணம் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர்களுக்கு சாதகமாக முடிந்து விடும் என்பதால் நடைமுறை படுத்தாமல் விட்டு உள்ளார்கள்.


அதிமுக அரசை எதிர்த்து 10 வருடம் போராடி கொண்டு வருகிறோம் விடியல் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது தான் அதிர்ச்சியாக உள்ளது.


10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்து 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் NCTE அறிக்கை வெளியிட்டு நடைமுறை படுத்தி உள்ளது. இந்த அறிக்கை எங்களுக்கு பொருந்தும். நாங்களும் பாதிக்கபட்ட உள்ளோம் என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறோம்.


எங்கள் நியாயமான கோரிக்கையை கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் கோரிக்கை மனு அளித்தும் எங்களுக்கு பதில் வர வில்லை.


சட்ட மன்றத்தில் திமுக MLA சரவணன், அண்ணாதுரை மற்றும்  சன்முகையா  உரை ஆற்றியும் அரசு பதில் இல்லை.


 கூட்டணி கட்சி MLA ஆளூர் ஷாநவாஸ், அப்துல் சமது சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும்  அரசு பதில் இல்லை.


இதுவரை நான்கு  போராட்டம் நடத்தியும் அரசு பதில் இல்லை.


மக்கள் நல பணியாளர் போல் தான் நாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம் அவர்களுக்கு வேலை கிடைத்து உள்ளது. ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. பரிசீலனை செய்கிறோம் என்ற வார்த்தை கூட வர வில்லை.நாங்கள் என்ன பாவம் செய்தோம்.

கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் என்பதற்காக அதிமுக அரசு பழி வாங்கியது. அதிமுக அரசு பழி வாங்கியது சரி தான் என்று நீங்களும் பழி வாங்கினால் நாங்கள் எங்கே போவோம் அதிமுக ஆட்சியால் பாதிக்கபட்ட எங்களுக்கு திமுக அரசு வேலை கொடுக்காமல் வேறு யார் கொடுப்பார்கள்? கலைஞர் கொள்கை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று கூறி விடுவீர்கள் என்று அச்சம் உள்ளது.


கலைஞர் போட்ட கை எழுத்திற்கு உயிர் இல்லையா?கலைஞர் கொடுத்த அறிக்கை மதிப்பு இல்லையா?


NCTE ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் தான் ஆசிரியர் பணி  என்று கூறியது. அதே NCTE கூறிய clause v மட்டும் அதிமுக சரி திமுக சரி  ஏற்று கொள்ள மறுக்கிறார்கள்.


NCTE டெட் தேர்ச்சி பெற்றால்  7 ஆண்டுகள் வரை சான்றிதழ் செல்லும் என்று  அறிவித்தது இதை ஏற்று கொண்டது அரசு. மீண்டும் NCTE டெட் தேர்ச்சி பெற்றவர்கள்  7 ஆண்டுகள் நீக்கி ஆயுட்காலம் வரை செல்லும் என்று கூறிய போது அரசு ஏற்று கொண்டு உள்ளது.

ஆனால் NCTE clause v சொல்லுவது மட்டும் அரசு ஏற்று கொள்ள வில்லை ஏன் ???  NCTE சொல்வது எல்லாம் ஏற்று கொள்ளும் அரசு NCTE clause v மட்டும் கசக்கிறதா?????


யார் கூறினால் முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு வேலை கொடுப்பார். கலைஞர் இருந்து இருந்தால் இந்நேரம் எங்களுக்கு பணி நியமன ஆணை கொடுத்து இருப்பார்.


NCTE norms, pending post, court order, கலைஞர் அறிக்கை இதை பின்பற்றி முதல்வர் பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுப்பாரா? கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம் கலைஞர் உருவில் நிச்சயம் எங்களுக்கு வேலை கொடுப்பார் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.


சென்னை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று அறிக்கை கொடுத்த முன்னாள் முதல்வர் கலைஞர் அறிக்கை




கூட்டணி கட்சி தலைவர்கள் எங்கள்   நியாயமான கோரிக்கை ஏற்று  முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளித்த மனுக்கள்











சட்டமன்றத்தில்.கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட எங்களுக்கு திமுக MLA மற்றும் கூட்டணி கட்சி MLA ஆற்றிய உரை காணொளி


உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் ஆசிரியை உமா சித்ரா அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்த காணொளி


இதுவரை நான்கு போராட்டம் நடத்திய காணொளி




Comments

  1. 91-92ல் D.Ted சேர்ந்து 2 ஆண்டுகள் படித்தோம். ஆனால் அப்போதைய முதல்வர் அம்மையார் அவர்கள் செல்லாது என்று சொல்லிவிட்டார்கள்.மீண்டும் அதே அம்மையாரால் 93-94 ல் புத்தொளி பயிர்ச்சி என்று அரசுபள்ளிகளில் சேர்த்து 2வது முறையாக படிக்கவைத்தார்கள். ஆனால் அதுவும் செல்லாது என்றாகிவிட்டது. மீண்டும் 3வது முறையாக 2011 ல் ஆட்சிக்கு வந்த அம்மையார் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் எங்களை சிறப்பு பிரிவுன் கீழ் 2 ஆண்டுகள் படித்தோம். இப்படியாக 3 முறை பாதிக்கப்பட்ட நாங்கள் 2023 வரையிலும் பாதிக்கப்பட்டவர்களாகவே வேலை இல்லாமல் இருக்கிறோம். நீதிமன்ற உத்தரவு இருந்தும் கலைஞர் கையெழுத்து இருந்தும் இன்னும் பணி நியமனம் கிடைக்கவில்லை.... எனவே தயை கூர்ந்து எங்கள் மீது கருணை காட்டி பணிநியமனம் வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மிக்க நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog