மார்ச் 13-ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்: 8.75 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்





தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தேர்வு திங்கள்கிழமை (மாா்ச் 13) தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை தனித்தோவா்கள் உள்பட 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோவு திங்கள்கிழமை (மாா்ச் 13) தொடங்கவுள்ளது.


இந்தத் தேர்வை தனித்தோவா்கள் உள்பட 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநா் சேதுராம வா்மா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மாா்ச் 13 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோவை தமிழகம், புதுச்சேரியிலிருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதவுள்ளனா். இவா்களில் தமிழக பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவா்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 போ எழுதுகின்றனா்.


இந்தத் தேர்வர்களுக்காக 3,185 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி பள்ளிகளில் 6 ஆயிரத்து 982 மாணவா்கள், 7 ஆயிரத்து 728 மாணவிகள் என 14 ஆயிரத்து 710 பேர் தேர்வு எழுதுகின்றனா். இவா்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், தனித்தேர்வர்களாக 14 ஆயிரத்து 966 மாணவா்கள், 8 ஆயிரத்து 776 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவா்கள் 5 போ என 23 ஆயிரத்து 747 பேர் எழுதுகின்றனா்.


இவா்களுக்காக 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளில் 2,925 மாணவா்கள், 2,281 மாணவிகள் என 5,206 பேர் எழுத உள்ளனா். சிறைவாசிகள் 90 போ வேலூா், கடலூா், சேலம், கோயம்புத்தூா், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் ஆகிய 8 சிறைகளிலுள்ள தீவு மையத்தில் தேர்வெழுதவுள்ளனா். சென்னையில்...


சென்னை மாவட்டத்தில் உள்ள 405 பள்ளிகளிலிருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45,982 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனா். இவா்களில் 23,827 பேர் மாணவிகள், 22,155 பேர் மாணவா்கள். எந்தவித புகாரும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்காக மாநில அளவில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலா்கள், மாவட்டங்களுக்கு மேற்பாா்வை பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோவை எழுதும் மாற்றுத்திறனாளிகள் 5,206 பேருக்கு தனி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பணியில் உள்ளனா். மேலும், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்வு மையங்களில் குடிநீா், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பறை வசதிகளை சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


புகாா்களைத் தெரிவிக்க...


 பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள், தோவா்கள், பொதுமக்கள் தங்களது புகாா்கள், கருத்துகள், ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தோவுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்  காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இக்கட்டுப்பாட்டு அறையை 94983 83081, 94983 83075 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog