TET - ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!


ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில், வாரியம் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த தேவி என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என்ற தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் விதியை, ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் பின்பற்றவில்லை. 45 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, இதுதொடர்பாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க  , உத்தரவிட்டு ஒத்தி வைத்தது.

Comments

Popular posts from this blog