11 November 2024

 நிதி நெருக்கடியில் தமிழக அரசு: 5960 ஆசிரியர்களுக்கு பணி ஆணை விவகாரம் - டாக்டர் இராமதாஸ் பரபரப்பு அறிக்கை!



பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பல மாதங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து விட்ட நிலையில், அவர்களை பணி நியமனம் செய்ய அண்மையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூடத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.


தமிழ்நாடு அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் கிடைத்த பிறகு தான் ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கையே வெளியிடப்படும். ஆனால், தேர்வு முடிவுகளே வெளியிடப்பட்டு பல மாதங்களான பிறகு ஆசிரியர்கள் நியமனத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுவது வினோதமாக உள்ளது.


3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது.


அதன்பின் 3 மாதங்களுக்கு மேலாகியும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததை கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி சுட்டிக்காட்டிய பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளாடுவதால் தான் ஆசிரியர்கள் நியமனத்தை கிடப்பில் போட்டிட்ருப்பதாக குற்றஞ்சாட்டியது.


அதன்பின் ஒரு மாதத்திற்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் கூறியிருப்பதன் மூலம், நிதி நெருக்கடி காரணமாகத் தான் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் உடனடியாக அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.


அதேபோல், அரசு பள்ளிகளுக்கு 2,768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை 21ம் நாள் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒரு போட்டித் தேர்வு நடத்தப்பட்ட அடுத்த சில நாட்களில் அதற்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட வேண்டும்.


அவ்வாறு வெளியிடப்பட்ட விடைக்குறிப்புகள் தொடர்பாக தேர்வர்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால், அவை ஆய்வு செய்யப்பட்டு ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்ட பிறகு தான் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தொடங்கும். ஆனால், தேர்வு நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரை விடைக்குறிப்புகளை தேர்வு வாரியம் வெளியிடவில்லை. இதற்கும் தமிழக அரசின் நிதி நெருக்கடி தான் காரணம் என்று கூறப்படுகிறது.


ஒரு மாநில அரசின் முதல் செலவு கல்விக்கானதாகத் தான் இருக்க வேண்டும். தமிழக அரசின் நிதிநெருக்கடி ஆசிரியர்கள் நியமனத்தை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.


எனவே, 2768 இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித்தேர்வின் விடைத்தாள்களை உடனடியாக திருத்தி, தகுதியானவர்களை கண்டறிந்து பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 TNPSC Group - 2 பணியிடங்கள் அதிகரிப்பு!



குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள அரசுப் பணிகளுக்கு பல்வேறு நிலை தேர்வுகளை நடத்தி வருகிறது.


அந்தவகையில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.


குரூப்-2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப் பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்களும்


குரூப் 2 ’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.


இந்த பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது.


தமிழக முழுவதிலும் இருந்து மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.81 லட்சம் பேர் எழுதினர்.


இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக 213 சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளது. இதன் மூலமாக தற்போது மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது.


முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் இதில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பள்ளிக்கல்வி துறையில் விரைவில் வரப்போகும் மாற்றங்கள்; சஸ்பென்ஸ் வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்



விழுப்புரம்: நவம்பர் 13ஆம் தேதிக்கு பிறகு தலைமை ஆசிரியர் பணிக்காக பணி மூப்பு பட்டியல் வரவுள்ளது. பட்டியல் வெளியாகும்போது பள்ளிக்கல்வித்துறை தொடர்பான 30 சதவீத வழக்குகள் முடிவடையும் என விழுப்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சூர்யா பொறியியல் கல்லூரியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி மற்றும் ஆசிரியர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மாநாட்டில் உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்: 


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணி என்பது சாதாரண பணி அல்ல. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் என்ற மல்லர் கம்பத்தில் தினமும் ஏறி, இறங்கும் பணியை தான் செய்து கொண்டிருக்கிறேன். 


இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தை விடவும் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களை அடித்துக் கொள்ள வேறு யாரும் இல்லை. நேற்று வரை 233 தொகுதிகளிலும் ஆய்வு செய்துள்ளேன். எந்த தொகுதிக்கு சென்றாலும் ஆய்வுக்கு பின்னர் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பு கொண்டு ஆய்வு குறித்து தெரிவிப்பேன். 


கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எடப்பாடி தொகுதிக்கு சென்று ஆய்வு செய்தேன் பிறகு எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு ஆய்வு குறித்து தெரிவித்தேன்.


ஆசிரியர்களின் மகிழ்ச்சியே அரசின் மகிழ்ச்சி என இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதனை மறக்கவும் மாட்டோம், மறுக்கவும் மாட்டோம் என முதல்வர் சட்டமன்றத்திலேயே கூறியுள்ளார்.


 நமக்கான தலைமை ஆசிரியர் முதல்வர் ஸ்டாலின். இந்த ஆண்டு முதல் நமக்கு உதவி தலைமை ஆசிரியர் ஒருவர் வந்துள்ளார் அவர்தான் உதயநிதி ஸ்டாலின். நான் உங்களின் வகுப்பு ஆசிரியர். என் பணி என்பது நீங்கள் என்னவெல்லாம் கேட்கிறீர்களோ அதனை முதல்வரிடம் கொண்டு சென்று அதனை வாங்கித் தரும் பணியைத்தான் செய்து வருகிறேன். கண்டிப்பாக நான் அதனை செய்வேன். 


கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் செய்த தவறுகளை சீர் செய்வதற்கு எங்களுக்கு மூன்றாண்டு காலம் ஆகியுள்ளது


கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் செய்த தவறுகளை சீர் செய்வதற்கு எங்களுக்கு மூன்றாண்டு காலம் ஆகியுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. 


திட்டங்களை மற்ற மாநிலங்களும் பாராட்ட காரணம் முதல்வரும், ஆசிரியர்கள் தான் காரணம். அடுத்த இரண்டு ஆண்டு மட்டும் திமுக ஆட்சி இல்லை, ஏழாவது முறையாக, அடுத்த ஏழு ஆண்டுகளுக்கும் திமுக தான் ஆட்சியில் இருக்கும். 


ஒரே கையெழுத்தில் ஒரு லட்சம் வரை பணியில் இருந்து நீக்கி அவர்கள் யார் என்பதையும், ஒரே கையெழுத்தில் அரை லட்சம் பேரை பணியில் சேர்த்தவர்கள் யார் என்பதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது. ஆசிரியர்களோடு சேர்ந்து இந்த சமூகத்தை உயர்த்த நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். என உரையாற்றினார்.


மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்:


தமிழக முதல்வரின் தலைமையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பாக முதலமைச்சரிடம் நாங்கள் அளித்த விளக்கம் 2500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளோம். 


இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தலைமையாசிரியர் தேர்வில் டெட் தேர்வில் முறையில் தேர்வு செய்யப்படுமா அல்லது பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுமா என்கிற கேள்விக்கு, அரசாங்கத்தை பொருத்தவரை பணி மூப்பு அடிப்படையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வாதம் செய்துள்ளோம். ஆனால் இது தொடர்பான பட்டியல் முழுமை அடையவில்லை.


இது தொடர்பான பட்டியல் நவம்பர் 13ஆம் தேதிக்கு பிறகு பட்டியல் வரவுள்ளது. அது தொடர்பான பட்டியல் வெளியாகும் போது பள்ளிக்கல்வி தொடர்பான 30 சதவீத வழக்குகள் முடிவடையும். பகுதி நேர ஆசிரியர்களை பணிமியமனம் செய்வது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணி நிரந்தரம் படிப்படியாக செய்யப்படும், நிதி நெருக்கடியில் 2500 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக பகுதி நேர ஆசிரியர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என தெரிவித்தார்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...