.webp)
நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோ பதி படிப்புகள் மற்றும் கால் நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 4ம் தேதி நேரடி முறையில் நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் வரை எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை...