11 April 2025

 குரூப் 4 தேர்வு! தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல! அன்புமணி ராமதாஸ் ஆவேசம்




பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததால் போக்குவரத்துத் துறை குரூப் 4 பணியாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்


அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு. அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சிதைப்பதாக இருக்கக் கூடாது என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்காக போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி 4 (குரூப் 4) பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. வேலைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில், இன்று வரை நியமன ஆணைகளை வழங்காமல் தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல.


 

போட்டித் தேர்வுகள் முடிவுகள் அக்டோபரில் வெளியாகின


தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு சுமார் 9600 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அக்டோபர் 28-ஆம் நாள் வெளியிடப்பட்டன.


அரசு வேலை கிடைக்குமா?


எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அனைத்து சான்றிதழ்களையும் தாக்கல் செய்தவர்களுக்கு துறைகள் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. அதனால், தங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது பறிக்கப்படுமா? என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். கடுமையான மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 

குரூப் 4 பணியாளர்களை நியமிப்பதில் மட்டும் அரசு காலம் தாழ்த்துவது ஏன்?


போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், போக்குவரத்துறைக்கு தொகுதி 4 பணியாளர்களை நியமிப்பதில் மட்டும் அரசு காலம் தாழ்த்துவது ஏன்? ஒருவேளை அவர்கள் நியமிக்கப்படுவதற்கு இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகும் என்றால், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்படி தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?


அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு


அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு. அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சிதைப்பதாக இருக்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போக்குவரத்துத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

 கூட்டுறவுத் துறையில் 3,353 வேலைகள் ரெடி: அமைச்சர் அறிவிப்பு!




கூட்டுறவுத் துறையில் 3,353 பணியிடங்கள் விரைவில்! அமைச்சர்  அறிவிப்பு!


தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!


கூட்டுறவுத் துறையில் விரைவில் 3,353 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் சட்டசபையில் தெரிவித்துள்ளார். மாநில கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் மற்றும் தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.


 

சட்டசபையில்  நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய அமைச்சர் பெரியகருப்பன், கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களும், நியாய விலை கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் போன்ற பல்வேறு பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று உறுதியளித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் 13,266 பணியாளர்களைத் தேர்வு செய்ய தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் 9,913 பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன. தற்போது மீதமுள்ள 3,353 பணியிடங்களுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று அவர் கூறினார்.



விரைவில் 3,353 பணியிடங்கள் நிரப்பப்படும்:


மாநில கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களும், நியாய விலை கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் போன்ற பணியிடங்களும் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இது தவிர தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் 13,266 பணியாளர்களை தேர்வு செய்ய தேர்வுகள் நடத்தப்பட்டு 9,913 பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள 3,353 பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் சட்டசபையில் ஆணித்தரமாக தெரிவித்தார்.


 

ஆகவே, கூட்டுறவுத் துறையில் பணியாற்ற ஆர்வமுள்ள தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அரசு அறிவிப்புகளைக் கவனித்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...