19 March 2025

 நீதிமன்ற வழக்குகளில் தீா்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்: அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி




நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தாா்.


சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜூ பேசினாா். அப்போது, அதிமுக ஆட்சியில் 51 ஆயிரம் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும், ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியா்களுக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டதாகவும், இதில் 10-இல் ஒரு சதவீதம் கூட நான்கு ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினாா். மேலும், ஆசிரியா்களைத் தோ்வு செய்வதற்காக 2,800 பேரின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டு 10 மாதங்களாக உத்தரவுகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினாா்.


அமைச்சா் அன்பில் மகேஸ்: பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களில் 3,192 பேரை நியமிக்க நடவடிக்கை எடுத்தோம். அதில், ஆசிரியா் இல்லாத பணியாளா்கள் தங்களுக்கும் 2 சதவீத இடஒதுக்கீடு தேவை என வழக்குகளைத் தொடா்ந்தனா்.


மேலும், தலைமையாசிரியா்கள் பதவி உயா்வில் ஆசிரியா் தகுதித் தோ்வு தேவையா, இல்லையா என்பது குறித்தும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் தீா்ப்புகள் கிடைக்கும்பட்சத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த பிரச்னைகளில் 60 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை முடிக்கப்பட்டு விடும் என்றாா் அமைச்சா்.

 அரசு பல்கலைக்கழகங்களில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள்




நாடு  முழுவதும் உள்ள ஒன்றிய அரசு பல்கலைக்கழகங்களில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் பதிலளித்தார்.


காலியிடங்கள் விவரம்:


நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 2025 ஜனவரி 31ம் தேதி கணக்குப்படி, 5,400 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ஓபிசி, எஸ்டி மற்றும் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டவை.

எஸ்சிக்கு 788, எஸ்டிக்கு 472, ஓபிசிக்கு 1,521 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த பல்கலைக்கழகங்களில் 7,825க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கங்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சரின் கருத்து:


"பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கங்கள் மூலம் அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள காலியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது."


வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு:


இந்த அறிவிப்பு பேராசிரியர் கனவுடன் காத்திருக்கும் நபர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒன்றிய அரசு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகலாம்.

 பட்ஜெட்டில் ஏமாற்றம்: பணியிட எண்ணிக்கையை அதிகரிக்க போராடும் 37,000 பட்டதாரி ஆசிரிய தேர்வர்கள்



தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2023 அக்டோபர் 25-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிக்கையை வெளியிட்டது. இத்தேர்விற்கு 40000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.


 அதன்படி தேர்வு 04/02/2024 அன்று நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் 17/05/2024 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்விற்காக அறிவிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 3192 ஆகும். ஆனால் 2803 பேரை மட்டுமே தேர்வு செய்து பட்டியல் வெளியிட்டது ஆணையம். அவர்களுக்கும் இன்னும் பணி ஆணை வழங்கப்படவில்லை.


கடந்த 10 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு நடைபெறவில்லை. கடைசியாக 2013-2014-ம் கல்வியாண்டில் அ.தி.மு.க ஆட்சியில் 20000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.


 ஆனால் 10 வருடங்களுக்குப் பிறகு தி.மு.க ஆட்சியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 3192 மட்டுமே. அதையும் முழுமையாக தேர்வு செய்து பணி ஆணை வழங்கவில்லை. 


இதனால் தேர்வர்கள் காலிப்பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்று கடந்த 10 மாதங்களாக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகள் என பலரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


தேர்வர்கள் இவ்வளவு கோரிக்கை வைத்த பின்பும் அரசு நிறைவேற்றும் என்றும் பார்த்தால் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 841 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்றும் அதற்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கும் என்றும் அறிவித்தது தேர்வர்களை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.


ஏற்கனவே நடைபெற்ற தேர்வுக்கான பணிகளே இன்னும் நிறைவடையாத நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெட் மற்றும் நியமன தேர்வு தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 


டெட் மற்றும் நியமனத் தேர்வு தேர்ச்சி பெற்ற சுமார் 37,000 தேர்வர்களின் 12 ஆண்டு கோரிக்கை இது ஆகும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுமா என தேர்வர்கள் காத்திருக்கிறார்கள்.

  ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்திவைக்கக் கோரி மனு: தேர்வு வாரியம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு புதிய பாடத்திட்டம் காரணமாக முதுகலை பட்டதார...