
12 ஆண்டுகள்.. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் : முதலமைச்சரை சந்திக்க முடிவு! இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போது 13,331 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் தற்காலிக ஆசிரியர்களாக நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பல வருடங்களாக தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் இருந்து வரும் சூழலில் தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளதாகவும் அவர்கள் ஒரு புறம் இருந்தாலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று இது குறித்தான கோரிக்கைகளை அரசு அலுவலர்களிடம் அளித்து ஆலோசனைக் கூட்டமும் நடத்தி வருகின்றனர். அதன்படி கோவையில் அனைத்து மாவட்டத்திலும் சேர்ந்த நிர்வாகிகள் அவர்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். இது குறித்து பேசிய அ...