29 January 2025

 டெட் தேர்வை பற்றி அறிவிக்காத தமிழக அரசு!! ஆசிரியர்கள் குமுறல்!!





நம் தமிழக அரசின் உத்தரவின்படி, வருடத்திற்கு இருமுறை டெட் தேர்வு வைக்க வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு குழு அறிவித்திருந்தது.


ஆனால், வருடம் முடியும் வரை டெட் தேர்வுக்கான அட்டவணை வெளியாகவே இல்லை. கடைசியாக தமிழகத்தில் 2023 அக்டோபரில் இந்த தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. இதனால், இந்த வருட டெக் தேர்வு குறித்து பி.எட் படிப்பை முடித்த ஆசிரியர்கள் வெகு ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


போன வருடம் முழுவதும் ஏன் டெட் தேர்வு நடத்தவில்லை என்பது குறித்து தேர்வு ஆணையம் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த வருடமாவது, தேர்வு குறித்து முன்கூட்டியே அறிவிக்குமாறு தொடர்ந்து ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


மேலும், இந்த தேர்வை ஒரு முறையில் கிளியர் செய்வது கடினம். எனவே சென்ற வருடம் பி.எட் படித்த ஆசிரியர்கள் ஒத்திகைக்கு இது பெரும் பயன்படும் என்று ஆசிரிய பெருமக்கள் தெரிவித்து வருகின்றனர். 


இந்த தேர்வை கிளியர் செய்தால் தான் அரசு பள்ளிகளில் அல்லது அரசு சார்ந்த உதவி பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று முனைப்போடு இதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர் பெருமக்கள். தமிழக அரசு இவர்கள் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 தமிழகத்தில் 6.50 லட்சம் காலி பணியிடங்கள்.! என்ன செய்யப்போகிறது அரசு- காத்திருக்கும் இளைஞர்கள்




தமிழகத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசு ஊழியர்களாக உள்ளனர். அரசு ஊழியர்கள் தான் அரசுக்கும் மக்களும் இடையே பாலமாக செயல்பட்டு வருகிறார்கள்.


இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் பணி ஓய்வு பெறுகிறார்கள். அந்த காலி பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பாமல் பல இடங்களில் காலியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு உதவிதிட்டங்களை உடனடியாக சென்று சேர்க்க முடியாத நிலை உள்ளது.


 


திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு.?


இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மேலும் 2 லட்சம் பணியிடங்களை புதிதாக உருவாக்கி அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். 


ஆனால், அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதுடன், கடந்த நான்காண்டுகளில் கூடுதலாக ஏற்பட்ட மூன்று லட்சம் காலியிடங்களையும் திமுக அரசு நிரப்பவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக கடந்த நான்காண்டுகளில் 34,384 பேருக்கு மட்டும் தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. 


தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் 1.30 கோடி பேர் அரசு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நிலையில் ஆண்டுக்கு பத்தாயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது இளைய தலைமுறையினருக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் என விமர்சித்துள்ளார்.


6.50 பணியிடங்களை நிரப்புங்கள்


அரசுப் பணியிடங்களை நிரப்பாததன் மூலம் சமூகநீதிக்கும் பெரும் துரோகத்தை திமுக அரசு இழைத்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, எல்லா பணியிடங்களிலும் ஒப்பந்த முறையிலும், குத்தகை அடிப்படையிலும் தான் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை.


அதனால், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது என்று பெருமிதம் கொள்வதில்லை எந்த அர்த்தமும் இல்லையென கூறியுள்ளார். மூச்சுக்கு முன்னூறு முறை சமூக நீதி என்று பெருமை பேசிக் கொள்ளும் மு.க.ஸ்டாலினுக்கு உண்மையாகவே சமூகநீதியிலும், இளைஞர் நலனிலும் அக்கறை இருந்தால், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6.50 லட்சம் காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி - டிடிவி தினகரன் ஆவேசம்!




ஆசிரியர் தகுதி தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கும் நிலையில், ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டிய தேர்வை ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஒன்றரை வருடமாக காத்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.


 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு 2023 ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில், அதன் பின் தற்போது வரை தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பைக் கூட வெளியிடாமல் காலம் தாழ்த்தி வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.


தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் படி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வை, ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது, அத்தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். 


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிக்கு சேர முடியும் என்பதால், அத்தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


எனவே, லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியை அறிவித்து தேர்வை நடத்துவதோடு, அத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையையும் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...