5 February 2025

 அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்




அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.


இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:


குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 30 ஆயிரம் ஆசிரியா் மற்றும் சமையலா் பணியிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக, குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டிய சுகாதாரம் மற்றும் முறைசாரா முன்பருவக் கல்வியைப் போதிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காலி இடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி பல போராட்டங்களை அங்கன்வாடி ஊழியா்கள் நடத்தி வருகின்றனா்.


ஏழை எளிய குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 பழைய ஓய்வூதிய திட்டம். 9 மாதத்தில் அறிக்கை.! விரிவாக ஆராய குழு அமைத்தது தமிழக அரசு உத்தரவு.!



பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட 3 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.


இக்குழு விரிவான அறிக்கையும் பரிந்துரைகளையும் தமிழ்நாடு அரசுக்கு 9 மாதத்திற்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்குப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 


அதே தருணத்தில் மத்திய அரசுப் பணியாளர்களுக்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்குத் தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. 


எனினும், மாநில அரசுப் பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தைச் செயல்படுத்தத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 


எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஒரு குழு அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 


மாநில அரசின் நிதிநிலையையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையை அரசுக்கு அளிக்க 3 அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


ககன்தீப் சிங் பேடி- ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், கே.ஆா்.சண்முகம்- மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர், பிரத்திக் தாயள்- நிதித் துறை துணைச் செயலர் (பட்ஜெட்) ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.


 இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 வனத்துறை காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு.!



தமிழ்நாடு வனத்துறையில் வரைவாளர் மற்றும் இளநிலை வரைவுத் தொழில் அலுவலர் நிலையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.


தமிழ்நாடு அரசு வனத்துறையில் உள்ள 34 வரைவாளர் மற்றும் 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்க வேண்டும் என்ற வனத்துறை தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார். 


இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது 72 பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப அனுமதி அளித்துள்ளது. இதனை அரசாணை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...