21 October 2024

 வேலை இல்லாதவர்களுக்கு  உதவித்தொகை விண்ணப்பம் செய்வது குறித்த முழு விவரம் உள்ளே!!




இன்றைய காலத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம்.குறிப்பாக பொறியியல் படிப்பு முடித்த பல இளைஞர்கள் உரிய வேலை வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் நலனிற்காக தமிழக அரசு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக புதுபித்தவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேலான

 கல்வி படிப்பு முடித்தவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.


செப்டம்பர் 30,2024 அன்றைய தேதியில் இருந்து ஐந்தாண்டுகள் நிறைவுற்று வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கிவருகிறது.


தகுதி:


1)விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72.000க்கு கீழ் இருக்க வேண்டும்.


2)பழங்குடியின விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதர வகுப்பை சேர்ந்த விண்ணப்பதாரர் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


உதவித் தொகை விவரம்:


பத்தாம் வகுப்பில் தோல்வி - மாதம் ரூ.200/-


பத்தாம் வகுப்பில் தேர்ச்சி - மாதம் ரூ.300/-


பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி - மாதம் ரூ.400/-


பட்டப்படிப்பு தேர்ச்சி - மாதம் ரூ.600/-


மாற்றுத் திறனானிகளுக்கான ஊக்கத் தொகை விவரம்:


பத்தாம் வகுப்பில் தேர்ச்சி - மாதம் ரூ.600/-


பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி - மாதம் ரூ.750/-


பட்டப்படிப்பு தேர்ச்சி - மாதம் ரூ.1000/-


மேலும் கூடுதல் விவரங்கள் பெற https://tnvelaivaaippu.gov.in இணையதள பக்கத்தை அணுக வேண்டும்.இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வருகின்ற 31 ஆம் தேதி இறுதி நாள் ஆகும்.

 ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!




நாடு முழுவதும் உள்ள இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர், பட்டதாரி பயிற்சி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இந்திய ராணுவ பொதுப் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. 


இந்திய அரசின் நிதி உதவியுடன், முதன் முதலில் 1983 இல் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ளிகளும் 249 மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.


இந்த பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது.


தற்போது நாடு முழுவதும் உள்ள ராணுவ பொதுப் பள்ளியில் நிரப்பப்பட உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர், பட்டதாரி பயிற்சி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத 8,113 பணியிடங்கள்: மிஸ்பண்ணிடாதீங்க...!


நிறுவனம்: Army Welfare Education Society


பணி: Post Graduate Teachers(PGT)


பணி: Trained Graduate Teachers(TGT)


பணி: Primary Teachers (PRT)


தகுதி: Accountancy, Biology, Biotechnology, Business Studies, Chemistry, Computer Science, Economics, English Core, Home Science, Information Practices, Mathematics, Physical Education, Physics, Political Science, Psychology போன்ற பாடப்பிரிவுகள் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் பி.எட் முடித்தவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும், Computer Science, English, Hindi, Mathematics, Physical Education, Sanskrit, Science, SST போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் பயிற்சி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும், ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் அல்லது 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும் மேற்கண்ட கல்வித் தகுதியுடன் மத்திய, மாநில அரசின் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்டும் சிஇடி,டிஇடி போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


சம்பளம்: சிபிஎஸ்இ விதிமுறையின்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயதுவரம்பு: பணி அனுபவம் இல்லாதவர்கள் 40-க்குள்ளும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நவம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறும்.


விண்ணப்பிக்கும் முறை: www.awesindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.10.2024


எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நவம்பர் 12 ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும்.


தேர்வு முடிவுகள் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்படும்.



 இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்?: அன்புமணி ராமதாஸ்



இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா?என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 


தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அவர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடங்கப்பட்ட பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அந்தப் பணிகளுக்காக காத்திருக்கும் தேர்வர்களிடையே ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18-ஆம் நாள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் 3 மாதங்களுக்கு மேலாகியும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.


பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. பட்டதாரி தமிழ் ஆசிரியர்களைப் பொறுத்தவரையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பி.லிட் பட்டம், பிற பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இளங்கலை தமிழ் பட்டத்திற்கு இணையானதா? என்ற சர்ச்சை எழுந்ததால் 164 தேர்வர்களின் தேர்ச்சியை தீர்மானிப்பதில் சிக்கல் எழுந்தது. இது தொடர்பாக நான் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக பி.லிட் பட்டம், இளங்கலை தமிழ் பாட பட்டத்திற்கு இணையானது தான் என்று அறிவிக்கப்பட்டு சிக்கல் தீர்க்கப்பட்டது. அதன் பின் அரசு நினைத்திருந்தால், அவர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வை ஒரே நாளில் நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்க முடியும். ஆனால், இன்று வரை அதை செய்யவில்லை.


அதேபோல், அரசு பள்ளிகளுக்கு 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை 21-ஆம் நாள் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒரு போட்டித் தேர்வு நடத்தப்பட்ட அடுத்த சில நாட்களில் அதற்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட வேண்டும். அவ்வாறு வெளியிடப்பட்ட விடைக்குறிப்புகள் தொடர்பாக தேர்வர்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்துகள் இருந்தால், அவை ஆய்வு செய்யப்பட்டு ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்ட பிறகு தான் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தொடங்கும். ஆனால், தேர்வு நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரை விடைக்குறிப்புகளை தேர்வு வாரியம் வெளியிட வில்லை. இதை விட வேறு முக்கியமான பணி என்ன இருக்கிறது? என்பதும் தெரியவில்லை.


விடைக்குறிப்புகளே இன்னும் வெளியிடப்படாத நிலையில், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 6 மாதங்கள் ஆகலாம். பிற நடைமுறைகளும் முடிந்து அவர்கள் பணியில் சேருவதற்குள் அடுத்தக் கல்வியாண்டு தொடங்கி விடக்கூடும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேல் நியமிக்கப்படாத நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி அரசு கவலைப்படாமல் இருப்பது சரியல்ல.


அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து அரசு பள்ளிகளுக்கு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...