2 February 2025

 திமுகவிற்கு செக்..! தேர்தல் வாக்குறுதி 181 ஞாபகம் இருக்கா? வந்து 4 வருஷம் முடியப்போகுது..




பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் கூறியதவது, அரசு பள்ளிகளில் 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக இதோடு 14 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்றோம்.


தற்போதும் 12,500 ரூபாய் தொகுப்பூதியமே வழங்கப்படுகிறது. இதில் மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு என எந்த சலுகையுமே கிடையாது என்பதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம்.


எனவே, இனியாவது அடிப்படை சம்பளம், அகவிலைப்படியுடன் கூடிய காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே இனி எஞ்சியுள்ள காலத்தில் எங்களின் குடும்பத்தை நல்லபடியா பாத்துக்கொள்ள முடியும். வர போகின்ற பட்ஜெட்டில் இதற்கான நிதியை முதல்வர் ஒதுக்க வேண்டும். திமுகவின் 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வாக்குறுதி கொடுக்கப்பட்டது.


திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு முடிய உள்ளது. ஆனாலும் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. எனவே இனியும் தாமதம் செய்யாமல் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 47,000 பேர் பணியிடங்களை நிரந்தரம் செய்து தற்போது ஆணையிட்டதை போல், 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்களையும் நிரந்தரம் செய்து ஆணையிட வேண்டும் என எஸ் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

 "தகுதியே இல்லாத ஒருவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா"..? அன்பில் மகேஷை உடனே நீக்குங்க. அண்ணாமலை ஆவேசம்..!!




தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளின் உள்ளன. அப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தப்படவில்லை. இதற்கு திமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.



இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, கிராமப்புற பள்ளிகளின் கல்வி தரம் குறித்த அறிக்கையின் படி நாட்டின் பிற மாநிலங்களை விடவும் பல பிரிவுகளில் தமிழகம் பின்தங்கி உள்ளது.


பள்ளிக்கல்வித்துறை குறித்து தமிழக அரசு கூறுவதற்கு நேர்மாறான புள்ளி விவரங்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களின் 28, 984 பள்ளி குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வாகும்.


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது, பாத்திரங்களை கழுவ வைப்பது, அமைச்சர்கள் பங்கேற்குமாறு நிகழ்ச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போல நடத்துவது என்று மிகவும் தரைகுறைவாக நடத்தும் பள்ளி கல்வித்துறையின் செயலிழந்த தன்மையால் தமிழக பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை இழந்து வருவது, இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படையாக தெரிகிறது. மேலும் பல பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சரி செய்யவில்லை, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தவும் செயல்பாடுகள் எதுவும் இல்லை, பள்ளி மாணவர்களுக்கு புதுமையான கல்வி முறையோ திட்டங்களோ அறிமுகப்படுத்தவில்லை.


ஆனால் நாட்டிலேயே கல்வித் தரத்தில் முன்னணியில் இருக்கிறோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். எதற்கெடுத்தாலும் குறை கூறப்படும் பீகார் மாநிலம் கூட தமிழகத்தை விட கல்வித்துறையில் முன்னேறி உள்ளது என்று தெரிவித்துள்ளார். 


தகுதியானவரை அமைச்சராக்கி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று கூறினார். மேலும் அமைச்சர் பதவியில் இருந்து அன்பில் மகேஷை நீக்கிவிட்டு அந்த துறைக்கு புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...