நீட் - 2023 தேர்வு முடிவுகள் எப்போது?



மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் - 2023 தேர்வை மே 7ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்தியது.



அதுமுதல், நீட் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். நீட் தேர்வு முடிவுகள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பல ஆயிரக்கணக்கான மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போகும் நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்பட்சத்தில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கு எந்த அரசுக் கல்லூரியில் சேர்க்கை கிடைக்கும் என்பதை முடிவெடுக்கவும், 


தோல்வி அடைந்தவர்கள், அடுத்து வேறெந்த கல்வியில் சேரலாம் என்பது குறித்து முடிவெடுக்கவும் வசதியாக இருக்கும். தமிழகத்தில், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியிருக்கும் நிலையில், நீட் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

Comments

Popular posts from this blog