அதிமுக அரசு எடுத்த கொள்கை முடிவை பின்பற்றும் திமுக அரசு எப்படி திராவிட மாடல் அரசாக இருக்க முடியும்?




இன்று(31-07-2023)TET வழக்கில் அதிமுக அரசு 2018 ல் தான் நியமன தேர்வு அறிவித்தார்கள் எனவே அந்த தேதிக்கு பிறகு TET முடித்தவர்களுக்கு தான் நியமனதை தேர்வு வைக்க வேண்டும் 2013,2017ல்  TET முடித்தவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என வாதிட்டிருக்கிறார்கள்.


பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா IAS அவர்கள் 2018ல் அரசு நியமனத்தேர்வு என்ற policy Decision எடுத்துள்ளது இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். இவர்கள் அதிமுக அரசு எடுத்த கொள்கை முடிவு சரியே என்று சொல்கிறார்கள்  போல? நடப்பது திமுக ஆட்சி இல்லை அதிகாரிகள் ஆட்சி தான் நடக்கிறது  நாங்கள் வச்சது தான் சட்டம் நாங்கள் அதிமுக கொள்கை தான் கடைப்பிடிப்போம் என்று வெளிப்படையாக கூறி உள்ளது அதிர்ச்சியாக உள்ளது.  திமுக கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நாமம் போட்டு உள்ளார்கள் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்.


கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கும் வேலை இல்லை நாங்கள் அதிமுக கொள்கையான டெட், நியமன தேர்வு தான் வைக்க போகிறோம் என்று முடிவு எடுத்து விட்டார்கள் போல தெரிகிறது.


கலைஞர் ஆட்சியில் முடித்தவர்கள் டெட் நடைமுறைக்கு வரும் முன்பே சான்று சரிபார்ப்பு முடிந்துவிட்டார்கள் நிலுவையில்  உள்ள காலி பணியிடம் , NCTE clause V அதிமுக அரசு  மூடி மறைத்து விட்டு டெட் தேர்ச்சி பெற்றவர்கள் நியமனம் செய்தது மிக கொடுமை அல்லவா?


 கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதிமுக அரசு பழி வாங்கியது.


நிலுவையில் உள்ள காலி பணியிடம், NCTE clause V அதிமுக அரசு மூடி மறைத்து உள்ளது இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு கொண்டு வந்தோம். அமர்வு நீதிபதிகள் NCTE clause V விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு எழுத தேவை இல்லை பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.


இந்த தீர்ப்பை வரவேற்ற கலைஞர் பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்.



2021 திமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் போட்ட கை எழுத்துக்கு உயிர் கொடுங்கள், கலைஞர் அறிக்கை க்கு மதிப்பு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தும் இதுவரை எங்களுக்கு எந்த அறிவிப்பு வர வில்லை.


2018ல் அதிமுக அரசு எடுத்த கொள்கை முடிவை பின்பற்றும் திமுகஅரசு எப்படி திராவிட மாடல் அரசாக இருக்க முடியும்?திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் கொள்கை முடிவு எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? அதிமுக கொள்கை தான் திமுக பின்பற்றுவோம் என்று கல்வி அதிகாரி மூலம் தெரிவித்து விட்டார்கள்.

Comments

Popular posts from this blog