10, 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!விண்ணப்பிக்க தவறியவர்கள் மார்ச் 28 முதல் மார்ச் 30 வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.




தமிழகத்தில் கொரோனா குறைந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனையடுத்து பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நேரடியாக நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி 10,11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு :மே 6 ம் தேதியும், 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ம் தேதியும் தொடங்குகிறது.

10,11,12 ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ம் தேதி தொடங்குகிறது.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு :மே 6 ம் தேதி முதல் மே 30 ம் தேதி வரை நடைபெறுகிறது. 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு :மே 9 ம் தேதி முதல் மே 31 ம் தேதி வரை நடைபெறுகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு முடிவுகள்: பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17 ஆம் தேதி, 11 ஆம் வகுப்புக்கு ஜூலை 7 ஆம் தேதி, 12 ஆம் வகுப்புக்கு ஜூலை 23 ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு: 2022-23 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். .


10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து தேர்வு துறை செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் மார்ச் 28 முதல் மார்ச் 30 வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog