Posts

Showing posts from June 11, 2025
Image
  35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை: உயர்கல்வியை  சீரழிவுக்கும் திமுக அரசு!பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்திருக்கும் முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின் அவர்கள், மேலும் 4 இடங்களில் புதிய கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தம் 35 புதிய கல்லூரிகளைத் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு ஒரே ஒரு புதிய பேராசிரியரைக் கூட திமுக அரசு தேர்ந்தெடுத்து நியமிக்காதது கண்டிக்கத்தக்கதாகும். 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தலா 10 கல்லூரிகள் வீதம் இரு கட்டங்களாக 20 கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டன. அதன்பின் கடந்த மாதம் 26-ஆம் தேதி 11 புதிய அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார். கூடுதலாக மேலும் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அடுத்த சில நாள்களில் திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்து தமிழ்நா...
Image
  NEET UG தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்-யூஜி 2025’ தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது. மாணவர்கள் இந்த விடைக்குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது. மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு (பைனல் ஆன்ஷர் கீ) தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும். இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இந்த வாரம் வெளியிட உள்ளது. வரும் 14ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை...