பிளஸ் டூ ஆங்கில தாள்; தொடக்கமே ஷாக். 2 பொது அறிவு வினாக்கள் வேறு; மாணவர்கள் கூறுவது என்ன?





தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 5) நடைபெற்ற ஆங்கிலத் தாள் எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.


12 ஆம் வகுப்பு ஆங்கிலத் தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். மாணவர்களுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. 20 ஒரு மதிப்பெண்கள் வினாக்கள் கிட்டத்தட்ட 10 வினாக்கள் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்திற்கு வெளியே கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் தேர்வு ஆரம்பித்த சிறிதுநேரத்திலே ஷாக் ஆகி விட்டனர்.


மற்ற வினாக்கள் ஆவரேஜ் அளவில் இருந்தது. ஒரளவுக்கு எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கும் வகையில் மாணவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.


இதனையடுத்து மாணவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக, பொது அறிவு தொடர்பாக இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று உங்கள் கண்களை பாதுகாப்பது என்பது பற்றி சிறு குறிப்பு எழுத கேட்கப்பட்டிருந்தது. கண்களை பாதுகாப்பது பற்றிய விடை தெரிந்திருந்தாலும், தமிழ் வழி மாணவர்கள் வாக்கியங்களாக சற்று திணறியிருக்கலாம்.


அடுத்ததாக மாணவர்கள் செய்திகளை எப்படி கவனிக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளும் வகையில், அண்மையில் படித்த செய்தியைப் பற்றி சிறுகுறிப்பு எழுத கேட்கப்பட்டிருந்தது. பொதுவாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் செய்தித் தாள்களை பெரிதாக படிப்பதில்லை. அதிலும் தேர்வுக் காலம் நெருங்கி வரும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுத்தமாக செய்தித் தாளையோ, ஊடகங்களையோ பார்ப்பதில்லை. இதனால் எந்தச் செய்தியை எழுதலாம், உள்ளூர் செய்தியை எழுதினால் போதுமா? அல்லது தேசிய அல்லது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை எழுதினால் தான் அதிக மதிப்பெண் கிடைக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கும். இதனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்க மாணவர்கள் சற்று திணறினர். இவ்வாறு மாணவர்களும் நிபுணர்களும் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog