நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக் கல்விச் செயலர் ஆஜர்

 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானார். 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை பணி வரன்முறைப்படுத்தும் வகையில் 2006-ம் ஆண்டு ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின்படி தாற்காலிக பணியாளர்களான தங்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்று கோரி அரியலூரைச் சேர்ந்த வேதவல்லி உள்ளிட்ட துப்புரவுப் பணியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அந்த வழக்கினை விசாரித்தஉயர் நீதிமன்றம் தகுதியுள்ள துப்புரவுப் பணியாளர்களை பணி வரன்முறை செய்யும்படி பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டது. எனினும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி தங்களது பணி வரன்முறை செய்யப்படவில்லை என்று கூறி அரசு மீதுநீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவை உயர்நீதிமன்றத்தில் வேதவல்லி தாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதி என். பால் வசந்தகுமார் முன்னிலையில் புதன்கிழமைவிசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். தகுதியுள்ள துப்புரவுப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. 

இதற்கு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அரசு வழக்குரைஞர் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog