கணினி அறிவியல் பாடம்.. கலைஞர் போட்ட உத்தரவு... முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு..!!!!






கலைஞரின் பிறந்தநாள் தினம் குறித்து முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி மாநில ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வே.குமரேசன் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதில் கிராமப்புறங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் கணிணிப் பாடத்தை படிக்க வேண்டும் என்பதற்காக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதன்முதலாகக் கணினி பாடத்திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.


இதனையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகப்படுத்தினார் கலைஞர் கருணாநிதி. அதன் பிறகு கலைஞர் கருணாநிதி கணினி அறிவியல் பாடம் என்பது மாணவர்களின் வளர்ச்சிக்கு மிக அவசியமானது என்பதை உணர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதை செயல்படுத்த வேண்டும் என விரும்பினார்.


ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த கணிணி அறிவியல் பாடத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இந்நிலையில் கலைஞர் கருணாநிதி கொண்டுவந்த அறிவியல் கணினி பாடத்திட்டத்தை மற்ற மாநிலங்களில் 1-ம் வகுப்பிலிருந்தே பின்பற்றி வருகின்றனர். இவர் தமிழகத்தில் 5 பாடம் என்ற நிலைமையை மாற்றி 6-வதாக கணினி அறிவியல் என்ற பாடத்தையும் கொண்டு வந்தார்.


எனவே கலைஞர் கருணாநிதி அறிமுகப்படுத்திய கணினி அறிவியல் பாடத்தை 6-ம் வகுப்பிலிருந்தே செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ வேண்டும். மேலும் மாணவர்களுக்காக கணினி அறிவியல் பாடத்தை அறிமுகப்படுத்திய கலைஞரின் பிறந்த நாளை அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் நாளாக கொண்டாட விரும்புகிறோம். எனவே தமிழக முதல்வர் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog