'தினமலர்' நடத்தும் 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு: ஏப்., 30ல் கோவையில் நடக்கிறது




தமிழக மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வில் வெற்றி பெறும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு, வரும் 30ம் தேதி கோவையில் நடக்கிறது.'தினமலர்' நாளிதழ் சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, 'நீட்' தேர்வு எழுத தயாராகும் மாணவர்களின் அச்சத்தை போக்கவும், அவர்களுக்கு வழிகாட்டும் வகையிலும், 'நீட்' மாதிரி தேர்வு கோவையில் நடத்தப்படுகிறது.



'தினமலர்' மற்றும் 'அலன்' நீட் பயிற்சி மையம் இணைந்து நடத்தும் இத்தேர்வு, கோவை, அவிநாசி ரோடு, பீளமேட்டில் உள்ள, பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி வளாகத்தில், வரும் 30ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:15 வரை நடக்கிறது.'நீட்' தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள், தங்களை சுயமாக பரிசோதித்துக் கொள்ள இத்தேர்வை பயன்படுத்திக்கொள்ளலாம்; அனுமதி இலவசம்.



பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 93602 75216 / 98940 09310 என்ற மொபைல் போன் எண்களில், இன்று முதல், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, தங்கள் பெயர், ஊர், மொபைல் போன் எண் ஆகியவற்றை பதிவு செய்பவர்கள் மட்டுமே, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.முன்பதிவு செய்தவர்கள், வரும் 30ம் தேதி காலை 9:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும்; தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும்.

Comments

Popular posts from this blog