TNPSC Group 4 தேர்வில் குளறுபடி - மறுதேர்வு நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் : சீமான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வுகள் கடந்த (ஜூலை 12) சனிக்கிழமை அன்று நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்வில் சுமார் 11.48 லட்சம் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். இந்தாண்டு வினாத்தாள் வழக்கத்தை விட கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தமிழ் மொழி தேர்வு செய்து தமிழ்வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக பரவலாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டி.என்.பிஎஸ்.சி. குரூப் - 4 தேர்வில் நடந்த குளறுபடியால், அதை ரத்து செய்து மறுதேர்வு நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி - 4 (GROUP 4) தேர்வு வினாத்தாளில் தமிழ்மொழி குறித்த பெரும்பாலான கேள்விகள் தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால், மி...