Posts

Showing posts from June 29, 2025
Image
  இதுதான் திராவிட மாடல் ஆட்சி..! தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 20% ஆசிரியர்கள் இல்லை: நயினார் நாகேந்திரன்! திருநெல்வேலி அருகே சுத்தமல்லி பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பாஜகவில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இணைந்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகத்தில் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. வேண்டாம் திமுக; இனியும் வேண்டாம் என்பதுதான் எங்களது கோஷம். எங்கள் கூட்டணி குறித்து மட்டுமே ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. எங்களைச் சுற்றி சுற்றி வந்து இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி கேட்பீர்களா? விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு எத்தனை சீட் தருவீர்கள் என்று முதல்வரிடம் கேட்பீர்களா?. எனவே எங்கள் கூட்டணி குறித்து மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம் .தேர்தல் வரும்போது கேளுங்கள். மாறுதல் வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். கூட்டணியில் இருப்பவர்களிடமும் மாறுதல் வேண்டும். அப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்படும். செல்வப் பெருந்தகை டாக்டர் ராமதாஸை சந்தித்தது குறித்து ...