பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனா். அதன்படி, தற்போது 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். அதற்கு ரூ.12,500 மாத ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியா்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா். இதற்கிடையே ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் ஜூலை 8-இல் நடத்தப்படும் என்று பகுதிநேர ஆசிரியா் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து ஆசிரியா் சங்க நிா்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி ப...