
இந்திய ரயில்வேயில் 6180 டெக்னீசியன் காலியிடங்கள்! இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னீசியன் கிரேடு III பிரிவில் 6000, டெக்னீசியன்கிரேடு I (சிக்னல்) பிரிவில் 180 என மொத்தம் 6180 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் இயற்பியல், மின்னணுவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது கருவியியல் ஆகியவற்றில் இளங்கலை அறிவியல் (பிஎஸ்சி) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறைகளில் டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிகளுக்கான வயது வரம்பு ஜூலை 1, 2025 தேதியின்படி 18 முதல் 33 வயது வரை இருக்க வேண்டும். டெக்னீசியன் கிரேடு 3 பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி/மெட்ரிகுலேஷன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஃபவுண்டரிமேன், மோல்டர், பேட்டர்ன் மேக்கர் அல்லது ஃபோர்ஜர் மற்றும் ஹீட் ட்ரீட்டர் போன்ற தொழில்களில் ஐடிஐ அல்லது அப்ரண்டிஸ்ஷிப்பை முடித்திருக்க வேண்டும். மாத ஊதியம்: டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் பணி சம்பள நிலை 5 இன் கீழ் வ...