
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து ஓராண்டு நிறைவு... பணி நியமனம் எப்போது? பட்டதாரி ஆசிரியர்கள் 'திடீர்' உண்ணாவிரதம்! இடைநிலை ஆசிரியர்களை போல் ஜூலை மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதி, சான்றிதழ்கள் சரி பார்ப்பு முடித்தவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர் பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடித்தவர்கள் பணி நியமன ஆணை வழங்கக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2023-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. 3,192 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 13, 2023 வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் 2024 பிப்ரவரி 4 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 40,136 பேர் எழுதினர். எழுத்து தேர்வு முடிவுகள் ஒஎம்ஆர் OMR (Optical Mark Reader) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் 2024-ம் ஆண்டு மே 18 ஆம் த...