TNPSC Group 2, 2A: செப்.28-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு; 645 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- விவரம்! டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே தெரிவித்தபடி, குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிக்கை இன்று வெளியாகி உள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ள இந்தத் தேர்வுக்கு இன்று (ஜூலை 15) முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 645 அரசு காலி இடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 11 (குரூப் 2 மற்றும் குரூப் 2 A) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025ஆம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு இன்று (15.07.2025) வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் தேர்வர்கள் 15.07.2025 முதல் 13.08.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு28.09.2025 அன்று நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக் கட...