இன்னும் 10,000 பேரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு குரூப்-2, 2ஏ தேர்வு அறிவிப்பு நாளை மறுநாள் வெளியீடு: சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பொறுத்தவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கடந்தாண்டு 10,701 பேர் பணியமர்த்தப்பட்டனர். இந்தாண்டு ஜூன் மாதம் வரை 11,027 பணியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு 4,300 பேர் அடுத்த இரண்டு மாதங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைப்படி தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் வரக்கூடிய அறிவிப்பின்படி இன்னும் 10 ஆயிரம் பேரை ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் 15ம் தேதி வெளியிடப்படும். இந்தாண்டு தேர்வுக்கான கால அட்டவணைபடி உரிய முறையில் தேர்வுகளை நடத்திவிட்டோம். குரூப் 4 தேர்வு தாளை திருத்துவதற்கான கணினி மையம் உள்ளது. ஏற்கனவே, 3 மையம் இருந்த நிலையில், அதனை 6 மையமாக அதிகரித்துள்ளோம். இதனால் 1 லட்சம் தேர்வு தா...