' வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றுக' - சென்னையில் 12 வது நாளாக 3,000+ பகுதிநேர ஆசிரியர்கள் திரண்டு பேரணி! பணிநிரந்தர கோரிக்கைக்காக 12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் இன்று சென்னையில் பேரணி நடத்தினர். இதில், 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டு பங்கேற்றனர். அரசுப் பள்ளிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பணிபுரியும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் எனத் தேர்தல் வாக்குறுதி (வாக்குறுதி எண் 181) அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், திமுக 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்க...