4000 அரசு கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை.! குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் பணியிடங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன என்ற புகார்கள் எழுந்த நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 2024-25 கல்வியாண்டில் மட்டும், கல்லூரிகள் இல்லாத பகுதிகளில் 15 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் செழியன், வெளியான தகவல்கள் தவறானவை என கூறினார். விரிவான பணியியல் விபரம் தற்போதைய நிலவரப்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,711 பேராசிரியர்கள் நிரந்தரமாக பணியாற்றி வருகின்றனர். 9,000 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது தவறான தகவல் என கூறப்பட்டுள்ளது. இந்த கா...