கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுபாட்டில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமன்ம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2,000 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தொடக்கமே ரூ.23,640 முதல் தொடங்கி அதிகபடியாக ரூ.96,395 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள் கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கம், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்களில் உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 01.07..2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 01.07.2007 அன்றோ அதற்கு முன்னரோ பி...