Posts

Showing posts from September 26, 2025
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல். ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு review உச்ச நீதிமன்ற வழக்கு  UP மாநில அரசு  Diary No 53434/2025 மூன்று IA File செய்துள்ளது . சீராய்வு மனுவை அனுமதிக்கவும் , விசாரணைக்கு எடுத்து கொள்வதற்க்கும் , நீதிமன்ற சான்று பெற்ற 1. 9.2025 நீதிமன்ற ஆணை சமர்பிக்க விலக்கு கோரியும் மனு செய்துள்ளது. புதிதாக ஒரு வழக்கு File செய்யப்பட்டுள்ளது . IA 247739/2025 இன்று File செய்யப்பட்டுள்ளது . விசாரணைக்கு வரும் போது கூடுதல் தகவல் தெரிய கூடும் . ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் . வழக்கு எண் வழங்கப்பட்டால் கூடுதல் தகவல் தெரிய கூடும்.
Image
  தேர்வு கிடையாது; தமிழக அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு; 1589 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு முறை என்ன என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, சேலம், திருநெல்வேலி மண்டலங்கள், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1589 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2025 பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices) காலியிடங்களின் எண்ணிக்கை: 459 Mechanical Engineering / Automobile Engineering - 399 Civil Engineering - 28 Electrical and Electronics Engin...
Image
  டெட் தோ்வு: பிரதமருக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் மனு டெட்  தோ்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, பிரதமருக்கு அஞ்சல் மூலம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை மனு அனுப்பினா். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களும் பணியில் தொடரவும், பதவி உயா்வு பெறவும் டெட் தோ்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி வரும் அகில இந்திய ஆசிரியா் கூட்டணியினா், டெட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதமா் அலுவலகத்திற்கு தபால் மூலம் மனு அனுப்பி வருகின்றனா்.