12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் தமிழக அரசு நல்ல செய்தி?அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். ஆசிரியர் சங்கங்கள் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். ஒருவேளை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் கிட்டத்தட்ட 12 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடையும் என்று கூறப்படுகிறது. இதற்கு சுமார் 450 கோடி வரை செலவாகும் என்றும் கூறப்படுகிறது. சிவகங்கையில் பள்ளிக்கல்வித்துைற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டியில் கூறும் போது, "அரசியல் அட்டவணையில் 22 மொழிகள் உள்ளது. இதனை அனைவரும் கற்க வேண்டும் என்பதில் தவறு இல்லை. ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது. இருமொழி கொள்கை பயின்ற நமது பிள்ளைகள் உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். மொழிக்கொள்கையில் மட்டும் மத்திய அரசு உறுதியாக இருப்பது ஏன்? அவர்கள் 3-வது மொழியாக இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் வேலையைத்தான் செய...