டி.எ.ன்.பி.எஸ்.சி கேள்வித்தாள்கள் இனி தாசில்தார் கைகளுக்கு செல்லாது: தலைவர் எஸ்.கே. பிரபாகர் அறிவிப்பு தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) புதிய நடைமுறை மாற்றங்களை அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 12 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 4 தேர்வைத் தொடர்ந்து, விடைத்தாள்கள் அடங்கிய கட்டுகள் உடைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் குறித்து இன்று விளக்கமளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர், "தேர்வு முடிவடைந்ததும் ஜூலை 14 அன்று விடைத்தாள்கள் அனைத்தும் ட்ரங்குப் பெட்டிகளில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. விடைத்தாள்கள் முழுமையாகப் பாதுகாப்பான முறையில் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளன, எங்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். உடைக்கப்பட்ட பெட்டிகளில் வேறு ஆவணங்கள் இருந்திருக்கலாம் என்றும், என்ன ஆவணங்கள் இருந்தன, எங்கே உடைக்கப்பட்டது, இதற்கு யார...