10000 பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? கோவி செழியனுக்கு அன்புமணி கேள்வி தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் 10,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதாக கோவி செழியன் கூறியதற்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், சுமார் 10,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 2708 இடங்களை மட்டும் நிரப்ப உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறியதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது என்று கூறி உள்ளார். இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் அறிவித்திருக்கிறார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப...