ஒரே நாளில் 1,231 நர்ஸ்கள் பணி நியமனம்.. மேலும், 2417 காலி பணியிடம் நிரப்பப்படும் - முதல்வர் ஸ்டாலின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மேலும் 2,417 கிராம செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்று இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 1,231 கிராம சுகாதாரச் செவிலியர்கள் பணி நியமன ஆணை பெற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.9.2025) சென்னை கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 5000 மக்கள்தொகைக்கு 1 துணை சுகாதார நிலையம் மற்றும் நகர்புறங்களில் 10,000 மக்கள்தொகைக்கு 1 துணை சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் இயங்கி வருகின்றது. 2025-ஆம் ஆண்டில் மக்கள் தொகைக்கேற்ப மேலும் 642 துணை சுகாதார நிலையங்...