Posts

Showing posts from July 23, 2025
Image
  TNPSC Group 4 Exams: குரூப் 4 மறுதேர்வு நடத்தவில்லையென்றால் அதிமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்யப்படும் - எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை வருவாய் இன்ஸ்பெக்டர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் 3,935 காலியிடங்கள் இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வானது திட்டமிட்டபடி ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 11,48,019பேர் எழுதினர். இந்நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வுகளில் குளறுபடிகள் நடந்துள்ளது. மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.  சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்கா...