ஒத்திவைக்கப்பட்ட எஸ்.ஐ தேர்வு டிசம்பர் 21-ல் நடைபெறும்; தேர்வு வாரியம் அறிவிப்பு 1299 காலியிடங்களை நிரப்புவதற்கான காவல் உதவி ஆய்வாளர் தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் தாலுகா மற்றும் ஆயுதப்படையில் காலியாக உள்ள 1,299 காவல் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதற்கான ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் தேர்வு நடைபெறவிருந்தது. இந்தநிலையில், காவலர் காலிப்பணியிடங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படும் முன்னுரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பினால், சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது. எனவே, ஜூன் மாதம் நடைபெறவிருந்த தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் தேர்வ...