சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எதற்கு? ஆசிரியர்கள் குழப்பம்- சட்டசபையில் சிறப்பு சட்டமியற்ற கோரிக்கை! தகுதித் தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டத்தை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் '5 ஆண்டுகளில் ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர்களை தவிர, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் முடியும்" என்றது. இதன் மூலம் 2011 தகுதித் தேர்வுக்கு முன்பாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணியில் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர் சங்கங்கள், கல...