Posts

Showing posts from October 6, 2025
Image
  திட்டமிட்டபடி அக்டோபர் 12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு - TRB அறிவிப்பு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான எழுத்துத் தோ்வு அக்டோபர் 12-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (TRB) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1), கணினி பயிற்றுநா் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி எழுத்துத்தோ்வு அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து தோ்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் அப்பாடங்களுக்கு தயாராகும் வகையில் 3 வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதிகள், முதுநிலை ஆசிரியா் தோ்வை தள்ளிவைப்பது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலி...
Image
  RTE - தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம் ஆர்டிஇ இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கு சென்றே பெற்றோர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இலவச மாணவர் சோ்க்கை இடங்கள் உள்ளன. மத்திய அரசு நிதியை தற்போது விடுவித்துள்ளதால் தமிழக தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கையானது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவா்களில் தகுதியானவா்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்வதற்காக 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கட்டணம் வசூலிக்க...