புதுச்சேரி வானொலியில் அறிவிப்பாளர், தொகுப்பாளர் பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை இதுதான்! புதுச்சேரி வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக புதுச்சேரி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி பிரிவுத் தலைவர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; புதுச்சேரி வானொலி மற்றும் ரெயின்போ எப்.எம் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, பகுதி நேர அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு வயது வரம்பு 2025 செப்டம்பர் முதல் தேதி உள்ளபடி 20 முதல் 50 வரையிலும், பகுதி நேர ஆர்.ஜே., பணிக்கு 20 வயது முதல் 40 வரையிலும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்க...