ஆசிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்; தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு TET தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆசிரியர் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று அண்மையில் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதேபோல ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் இல்லையெனில் டெட் தேர்வில் 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. வேலையை விட்டு வெளியேறலாம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதேபோல சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை டெட் தேர்வு பாதிக்குமா? என்று ...