தமிழகத்தில் 1,121 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 1,121 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தாா். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் பகுதியில் நகராட்சி உருது நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்டோா் பயின்று வருகின்றனா். இப்பள்ளி இந்த கல்வி ஆண்டுமுதல் உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனை அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்துவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இடைநிற்றலை தவிா்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக நடுநிலைப் பள்ளியாக இருந்த நகராட்சி உருது நடுநிலைப் பள்ளி உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க...