ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு: 56,000 பேர் ஆப்சென்ட்; தாள் 1, 2 எப்படி இருந்தது? தேர்வர்கள் கருத்து என்ன? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர கட்டாயமான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) 2024-ம் ஆண்டுக்கான தாள்-1, தாள்-2 ஆகிய தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆண்டு தேர்வெழுதியோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதும், இரு தேர்வுகளிலும் சேர்த்து 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத வரவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்ட அறிவிப்பின்படி, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விவரம்: தேர்வு விண்ணப்பித்தவர்கள் தாள்-1 (இடைநிலை ஆசிரியர்கள் - 1 முதல் 5 வகுப்பு) 1,07,370 பேர் தாள்-2 (பட்டதாரி ஆசிரியர்கள் - 6 முதல் 8 வகுப்பு) 3,73,438 பேர் மொத்தம் 4,80,808 பேர் தேர்வு எழுதியோர் மற்றும் ஆப்சென்ட் விவரம்: தேர்வு தேர்வு நடந்த நாள் தேர்வு எழுதியோர் ஆப்சென்ட் தாள்-1 நவ.15 92,412 பேர் 14,958 பேர் தாள்-2 நவ.16 3,31,923 பேர் 41,515 பேர் மொத்தம் - 4,24,335 பேர் 56,473 பேர் வினாத்தாள் குறித்த தேர்வர்களின் கருத்து: தாள்-1 தமிழ்நாடு முழுவதும் ந...