Posts

Showing posts from August 12, 2025
Image
 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுக்கான (Group 2 & 2A) அறிவிப்பு கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வுக்கு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2A உள்ளிட்ட அரசுத் தேர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பிரிவுகளில் 645 காலி பணியிடங்கள் கடந்த ஜூலை 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தன. மொத்தம் 645 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: குரூப் 2 (நேர்காணல் பதவிகள்): 50 இடங்கள் குரூப் 2A (நேர்காணல் இல்லாத பதவிகள்): 595 இடங்கள் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலிலும் தேர்ச்சி பெற்றால், அரசின் உயர்ந்த பதவிகளை பெற முடியும். இவர்களின் குறைந்த பட்ச சம்பளம் ₹36,900-₹1,35,100 (நிலை 16-18). குரூப் 2A (நேர்காணல் இல்லை) தேர்ச்சி பெற்று பணி பெறுபவர்களின் குறைந்த பட்சம்...
Image
  TNTET 2025 Exam: 2 ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு - முழு விபரம் இதோ ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 2023-க்குப் பிறகு இப்போது நடத்தப்படும் இந்தத் தேர்வு, ஆசிரியராகும் கனவுடன் காத்திருப்பவர்களுக்கு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தத் தேர்வுகள் தாள் I-க்கு நவம்பர் 1-ஆம் தேதியும், தாள் II-க்கு நவம்பர் 2-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் காலம்: ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 8 மாலை 5 மணி வரை. விண்ணப்ப மாற்றம்: செப்டம்பர் 9 முதல் 11 வரை. விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) நிர்ணயித்த குறைந்தபட்ச தகுதியின்படி, இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கத் தகுதி பெறுவார்கள். முன்னதாக, TNTET தேர்வுகள் 2013, 2014, 2017, 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டன. 2023-இல் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், தேர்வு 2024-ல் நடத்தப்பட்டு, ...