PG TRB Exam: பொருளாதாரம் ஈஸி, இயற்பியல் கடினம்; முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எப்படி இருந்தது ? தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 1996 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்வு அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் வழங்கும் வகையில் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்வை தள்ளிவைக்க வலியுறுத்தினார். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டபடி தேர்வை நடத்த முடிவு செய்தது. அதன்படி, இன்...