எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன 17 எய்ம்ஸ் மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர், டெல்லி இஎஸ்ஐசி மற்றும் இதர மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 3,500 காலிப்பணியிடங்களில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு செவிலியர் பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. கல்வித்தகுதி செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை நர்சிங் பட்டப்படிப்பு அல்லது நர்சிங் . (Hons.) பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் (அல்லது) Post Certificate நர்சிங்/ Post Basic நர்சிங் ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். மேலும் இந...